வீட்டு மொட்டை மாடில அம்மா ஒரு தோட்டம் பராமரிக்கறாங்க.
"மா... இந்த பூச்செடி ரொம்ப அழகா இருக்கு"
"ஆனா அத சாமிக்கு வைக்க கூடாது டா. இந்த வெள்ளைப் பூவ தான் வெக்கணும்"
"மா... இந்த பூச்செடி ரொம்ப அழகா இருக்கு"
"ஆனா அத சாமிக்கு வைக்க கூடாது டா. இந்த வெள்ளைப் பூவ தான் வெக்கணும்"
"ஏம்மா?"
"அந்த பூவுக்கு மனமே இல்லடா, அதுனால தான்"
"மனம்-ங்கற Sense-அ Satisfy பண்ணலைன்னாலும் பார்வை-ங்கற Sense-அ Satisfy செய்யுதில்லம்மா அது போதாதா?"
"சாமிக்கு வைக்க கூடாது-ன்னா வைக்க கூடாது அவ்வளவு தான் டா.. அதோட பெயரே கல்லறைப் பூ"
"வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும், பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்'-ன்னு ஒரு கவிஞன் உன்ன மாதிரி ஆளுங்கள மனசுல வெச்சு தான் எழுதினானாம்மா?"
"இருக்கலாம்"
"சரி, இந்த பூ-வுக்கு வாசனை இல்லாததுனால சாமிக்கு வெக்க கூடாதுன்னா உன் சாமி ஏன் அத படைச்சாரு? நம்ம வீட்டுல இருக்கற சாமி படத்துல இருக்கற சாமியெல்லாம் கண்ண மூடிட்டே இருக்கறதால இந்த பூவோட அழகை ரசிக்க அவருக்கு தெரியலையோ?"
"நீயே எழுப்பி கேளு டா சாமி கிட்ட"
"நீ தான சாமி கும்பிடுற.. நானா கும்பிடுறேன்?"
"இருந்தாலும் சாமி உன்ன மாதிரி அயோக்கியர்களுக்கு தான் கண்ணுல தெரியுவாரு"
No comments:
Post a Comment