Subscribe Alerts Via Feedburner

Thursday, February 4, 2016

உங்களுக்கு ஆள் இருக்கா?

"மச்சான்... உனக்கு ஆள் இருக்கா?"

" டேய்... அது என்ன டா 'ஆளு'? 'காதலி'னு அழகான தமிழ்ல பேசலாம்ல.. பேருக்கு மட்டும் தமிழ் வெறியன்னு சொல்லிட்டு திரியாதீங்க டா... தமிழனா வாழ்ந்து காமிங்க!"

"ஏய் ஏய் ஏய்... என்ன பேசிட்டே போற? காதலிக்கற பொண்ண 'ஆள்'னு சொன்னா என்ன குறைஞ்சு போச்சு? பாக்கியராஜே 'இது நம்ம ஆளு'னு படம் எடுத்திருக்கார்ல... அப்புறம் என்ன?"

"பாக்கியராஜ் தான 'ஆள்'னு சொல்லியிருக்காரு.. என்னமோ பாரதியாரே சொன்ன மாதிரி ரொம்ப பேசற?"




"ஓ! பாரதியாரும் கூட காதலிக்கற பொண்ண 'ஆள்'னு சொல்லியிருக்காரே.."

"என்னது பாரதியாரா? சும்மா உளராத டா"

"ஐயோ ஆமா பாரதியார் தான் டா.. நிரூபிச்சுட்டாலாவது நிறுத்துவியா சொல்லு?!"

"கோவிச்சுக்காத டா... நெஜம்மா பாரதியாரே ஆள 'ஆள்'னு சொல்லியிருக்காரா?"

"ஆமா டா சாமி... 'கண்ணம்மா என் காதலி'ல "ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே 'ஆள்'வந்து நின்றெனது கண் மறைக்கவே..."னு பாடிருக்காரு போதுமா?"

"தமிழ் வெறியன்டா நீ!"

"சரி... அதெல்லாம் இருக்கட்டும்.. உனக்கு ஆள் இருக்கா இல்லையானு சொல்லு முதல்ல!"


மாலை பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்
மூலைக் கடலினை அவ்வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபல நற் பகற்கனவில் தன்னை மறந்தலயந்தன்னில் இருந்தேன்

ஆங்கப் போழுதிநிலென் பின்புறத்திலே ஆள் வந்து நின்றெனது கண் மறைக்கவே
பாங்கினிற் கையிரண்டும் தீண்டியறிந்தேன் பட்டுடை வீசு கமழ் தன்னிலறிந்தேன்
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன் ஒட்டு மிரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்
“வாங்கி விடடி கையை யேடி கண்ணம்மா! மாயம் எவரிடத்தில்?” என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவிலக்கியே திருமித் தழுவி, “செய்தி சொல்” என்றேன் 
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற நலன்கள் என்ன? பேசுதி” என்றாள்
நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்: நீல விசும்பினுடை நின்முகங் கண்டேன்;திரித்த நுரையினிடே நின்முகங் கண்டேன்: சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒளியினிலுன் கை விலக்கியே திருமித் தழுவியதில் நின்முகம் கண்டேன்”.

No comments:

Post a Comment