Subscribe Alerts Via Feedburner

Monday, January 11, 2016

அந்த ஒரு ரகசியம்!

அடேய் காதலா!
காதலியிடம் கூட சொல்லாத ரகசியங்களையெல்லாம்
உன் நாட்குறிப்பிடம் சொல்வாயே...
உன் காதலியைப் பற்றி மட்டும்
ஏன் ரகசியம் காக்கின்றாய்?
யாரேனும் நாட்குறிப்பை எடுத்துப் படித்தால்
ஊருக்கெல்லாம் அம்பலம் ஆகிவிடும் உன் காதல் கதை
என்றா அச்சம் கொள்கின்றாய்?
துச்சனே...
இன்று கவிதையில் ஞான சூன்யமாய் விளங்கும் உன் காதலி
"ஆயிரம் காதல் கதைகள் படித்தபோதும்
விளங்காக் காதலை
என்னவன் எனக்காய் எழுதிய நாட்குறிப்புகளைப்
படித்த போது விளங்கிக் கொண்டேன்!" என
நாளை உனக்காய் எழுதப்போகும் கவிதைக்காகவேனும்
உற்ற நண்பனாம் நாட்குறிப்பிடம்
உன் காதல் ரகசியம் உடைத்திடு!
காவியம் படைத்திடு!

No comments:

Post a Comment