Subscribe Alerts Via Feedburner

Tuesday, February 9, 2016

தலைக்கேறிய பொறாமை

"திரண்டு நிற்கும் என்
திருமேனி தீண்டாமல்
தானியங்கி பணவழங்கிச் சாதனம்
துப்பியெறிந்த விலைமகளாம்
துண்டு ரசீதில் தன் கவிக்கரம் பதிக்கிறானே
தலைவன் என் கவிஞன்" - எனத்
தலைக்கேறிய பொறாமை கொண்டது
தன்னில் கவிதை எழுதப் பெறாத நாட்குறிப்பு!

No comments:

Post a Comment