Subscribe Alerts Via Feedburner

Thursday, November 26, 2015

சாதனைப் பட்டியல்

நான் என்றைக்காவது ஒரு நாள் ஓர் சிறுகதை எழுதினால், கட்டாயம் இடம் பெறப்போகும் என் வரிகள்:

"என்னிடமிருந்து எண்ணிக்கையில் அதிகப்படியான முத்தங்கள் வாங்கியவர்கள் பட்டியலில் என் மனைவி இரண்டாம் இடம் வகிக்கிறாள்" என தன் கணவரின் பழைய நாட்குறிப்பொன்றில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்த அவள் கண்களில் பொள பொளவெனக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது!



அதை கவனித்த அவள் கணவன், "அடி பைத்தியமே... முதல் இடம் வகிப்பவள் நம் மகள் தானடி! சரியாய்ப் பார் - அது எழுதப்பட்டது நம் மகளின் முதலாம் ஆண்டு நிறைவன்று!" என்றான்.

அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாலும், சமாதானம் ஆனது போல் தெரியவில்லை அவனுக்கு!

கச்சிதமாய் யோசித்து ஒரு காதல் வசனம் உரைத்தான்! "கண்ணே, நீயும் ஓர் சாதனைப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறாய்... என்னிடமிருந்து அதிகப்படியான எண்ணிக்கையில் இதழில் முத்தங்கள் வாங்கிய பெண்களின் பட்டியலில், முதலும் கடைசியும் நீ தான்!"

பின்னர், அவளது சாதனை மறுபடியும் அவளாலேயே முறியடிக்கப்பட்டது!

No comments:

Post a Comment