ஒருதாய்
வயத்துலதான் பொறக்கலியே
இருந்தும் ஒரு நாள் கூட
பிரியலியே
எங்கோ பிறந்து எங்கோ வளந்து
ஒன்றாய் சேர்ந்தது எதுக்குனு
விளங்கலியோ?
தாலிக்கு
மூணு முடிச்சுனு சொன்னவந்தான்,
ராக்கிக்கு முடிச்செத்தன? - சொல்லலியே!
சகோதரப்
பாசம் அளவில்லாம இருக்கனுமுன்னு
சொல்லாமத்தான் சூசகமாச் சொன்னானோ?
-----------------------------------------------------------------------------------------------------
மனப்பூர்வமான ரக்ஷா பந்தனம் வாழ்த்துக்கள் என் அருமை உடன் பிறவா சகோதரிக்கு! :-)
No comments:
Post a Comment