பிடரிமயிர்ச் சிங்கமாய்,
வண்ணத் தோகை மயிலாய்,
கவின் கொம்புடை மானாய்,
இறைவனின் படைப்புகள் அனைத்திலும்
ஆண் பிறவியே அழகு.
மனிதப் பிறவியைத் தவிர!
விண்ணிலோ நீ அழகு!!
ஆதலால், உன்னை
மனிதப் பெண்ணாய் பாவிக்கிறேன்,
என்னை மூடன் என்கிறார்கள்,
மூடர்கள்.
No comments:
Post a Comment