காந்தம் பொருந்திய கண்ணாடித் துண்டுகளோ அடி?
உன் கண்ணின் கருமணிகள்?
கண் கவரும் கருநிற மயிலிரகோ அடி?
உன் கண்ணிமையின் கருமுடிகள்?
கால்கள் கடக்கத் துடிக்கும் கற்கால கதைக்களமோ அடி?
உன் கண்மைக் கோடுகள்?
புன்னகை பெருக்கும் பெண்ணை ரசிக்கத் துவங்கினேன்;
தற்போது,
கவிதைகள் கணக்கும் அவள் கண்ணை ரசிக்கலானேன்...
No comments:
Post a Comment