காதல் பரிசாக,
குழப்பம் தந்தவளவள்.
அவளைப் பார்த்ததும் காதல் வந்தது,
அதற்கு முன்னரே குழப்பம் வந்தது-
சட்டென கண்கள் பரித்ததே ஒரு மின்னல்,
அங்கும் குழப்பம்.
அடடா...மின்னலல்ல, அவளது கண் சிமிட்டல்.
புன்னகைத்தாள்,
அதிலும் குழப்பம்.
தேன் மிட்டாயைக் கண்ட சிறு பிள்ளைபோல்
நா ஊறியது - அவள் இதழ் கண்டதும்.
காதல் பரிசாக,
குழப்பம் தந்து கொண்டிருப்பவள் அவள்...
-நான் எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த கவிதை…
No comments:
Post a Comment