Subscribe Alerts Via Feedburner

Tuesday, May 31, 2011

இசையுலகில் தமிழ் உச்சரிப்பு சீர்குலைதல்.

தமிழர்களே, தமிழ் விரும்பிகளே....
நான் இசைப்பிரியன், முக்கியமாக A. R. ரஹ்மானின் இசைப்பிரியன் என்பது நீங்கள் அறிந்ததே....

சமீபத்தில், கேட்ட பாடல்ளையே திரும்ப திரும்ப கேட்டு சலித்துப் போனேன். அவ்வாறு இதுவரை கேட்காத மெல்லிசைளை தேடிக்கொண்டிருந்த போது சிக்கியவற்றில் ஒன்றே- ரிதம் படத்தில் 'கல கலவென பொழியும் பொழியும்' எனும் பாடல். இசைப் புயலின் சாதனை சரித்திங்களில் மற்றுமொரு தென்றல், அப்பாடல். 

தமிழில் நூற்றுக் கணக்கான இசை அமைப்பாளர்கள் இருப்பினும், High Pitch மற்றும் Beat பாடல்களிலும் செவி இனிமை அடைவது ஆஸ்கர் நாயகனின் இசையில் மட்டுமே என்பது எனது தாழ்மையான கருத்து. அதே போல் தான், இந்த பாடலும்- 'தட தட' என அதிர்வுகள் இருப்பினும், ஒரு அருமையான மெல்லிசை.

இப்பாடலில் நிலவைக் குறித்து சில வரிகள்:

அழைக்கும் போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவிலலையே...
நினைக்கும் போது நிலவு உதிக்கும்; நிலவு அழைக்கக் குரலில்லையே....
விழி தொடுவது விரல் தொடவில்லையே...
மிக உணர்ச்சிகரமான பாடல் வரிகள். நிலவு என்பது இயற்கையின் முகம் போன்றது; உலகில் பெரும்பாலானோர் விரும்பத்தக்கது. சொல்லப்போனால், இந்த துணுக்கை நான் எழுதக் காரணமாய் இருந்ததே இவ்வரிகளில் நிலவைப் பற்றிக் கூரியிருப்பதால் தான்.

"நாம் நினைக்கும் போது உதித்தால், அது நிலவே இல்லை; அது தானாக உதிக்கும் போது நம்மை அழைக்க விரும்பினும் அதனிடம் குரல் இல்லை. இருப்பினும் அதற்கும் நமக்கும் ஒரு இனம் புரியாத நல்லுறவுள்ளது", என்பதை இவ்வரிகளில் உணரலாம்.

பௌர்னமி நிலவில் ஏற்படும் சிரிய களங்கம் போல் இப்பாடலிலும் ஓர் சிரிய பிழையைக் கண்டதால் வருந்துகிறேன்.

இசை அமைப்பாளர், பாடலாசிரியர் எடுத்த கூட்டு முயற்சி பாடலைப் பாடிய சாதனா சர்கம்  அவர்களால் சற்று சரிந்ததாக(மிக்க வருத்ததுடன் கூறுகிறேன்)  தோன்றியது.

சாதனா சர்கம்-AR ரஹ்மான் கூட்டனியில் மிகுந்த வரவேற்பு பெற்ற பாடல்கள் ஏராளம். உதாரணம் -  வெண்ணிலவே வெண்ணிலவே, காலையில் தினமும், காற்றில் ஓர் வார்த்தை மற்றும் பல...

ஆனால் இப்பாடலில் மேற்கண்ட வரிகளில் உச்சரிப்பு திருப்திகரமாக இல்லை. அவ்வரிகளின் நயம் சரியான உச்சரிப்பு இல்லாததால், கேட்டவுடன் புரிந்துகொள்ள இயலவில்லை.

ஒரேடியாக சாதனாவை குறை கூறுவது என் நோக்கமல்ல. இத்தவறை சுட்டிக்காட்டுவது என் ஆதங்கத்தை மட்டுமே உணர்த்துகிறது. அவரது குரல் கேட்கக்கொள்ளாததால் தான் அவர் தமிழ் மொழி தெரியாத போதும் மிகுந்த முயற்சியுடன் ரஹ்மான் தமிழில் பாட வைக்கிறார் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. இருப்பினும் மொழியின் அழகைச் சற்று கருத்தில் கொண்டு இசையமைப்பாளர் மற்றும் பாடகர் இருவரும்  செயல் படுவராயின் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வர்.

எனக்குத் தென்பட்ட பிழையை நான் சுட்டிக் காட்டியுள்ளேன். இது போன்ற தவறு இனி வரும் பாடல்களில் ஏற்படாமல் இருப்பின் என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும், புத்துணர்வும் ஊட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. very true... infact it is a unique and beautiful tune. and one cannot blame Sadhana fully, she ain't tamil. come on, namma vandhorai vaazha vaippavanga illaya...

    only that the link "padal varigal ketka" is not working... nevertheless, i am glad you analysed this song!

    - Vid :)

    ReplyDelete
    Replies
    1. Thanks Vidhya for excavating this blog post :D

      This was written about 4 years back about a song that is about 15 years old. If I have to rethink about this analysis of mine, I guess we should give a great round of applause to North Indian singers like Sadhana and Shreya Ghoshal for the tremendous improvement they have shown in their recent tracks!! I should even admit that their pronunciations are crystal clear (spashtam :P ) to a level that even some of our South Indian singers cannot achieve.

      Delete