Subscribe Alerts Via Feedburner

Monday, September 9, 2013

காட்டுத்தீ!

கன்னியவள் கண்களுக்கே
கோடிக் கோடி
கவிதைகள் கதைக்கலாம்.

கண்ணால் மின்னல்கள் பரப்பும் அந்தப்
பெண்ணால் இன்னல்கள் பிறக்கும்!

கணினியும் இயங்கும் - அந்த
கன்னியின்
கண் பொறி தரும் ஆற்றலால்!

அவள் கண் ஒரு மரம்,
என் கண் மறு மரம்;
கண்ணொடு கண்
கலக்கையில் - வேறென்ன?
காட்டுத்தீ!

No comments:

Post a Comment